ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி சார்பாக படங்கள் தயாரிக்க சினிமா பைனான்சியர் அன்புச் செழியனிடம் ரூ.21.29 கோடி கடன் பெற்றார். இதை அவர் திருப்பி செலுத்தவில்லை. இவரின் கடனை லைகா நிறுவனம் ஏற்று செலுத்தியது. அந்த தொகையை திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை மீறி விஷால் தனது 'வீரமே வாகை சூடும்' படத்தை வெளியிட்டதாக விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதி ஆஷா முன்பு வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. விஷால் நேரில் ஆஜரானார். ஒப்பந்தத்தை மீறி படத்தை வெளியிட்டது தொடர்பாக நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு விஷால், ‛‛ஒப்பந்தம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கினார்கள்'' என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‛‛புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா, உங்கள் கையெழுத்து தானே, நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்? இது ஒன்றும் சினிமா படப்பிடிப்பு அல்ல, கவனமாக பதில் அளியுங்கள்'' என்றார்.
தொடர்ந்து ‛சண்டக்கோழி 2' படத்தை வெளியிடும் முன்பாக பணத்தை தந்து விடுவதாக சொன்னீர்களே என நீதிபதி கேட்க, அதற்கு விஷால் அவரை ‛பாஸ்' என அழைத்தார். உடனே நீதிபதி, இப்படி பாஸ் என்றெல்லாம் அழைக்க கூடாது. கேட்கும் கேள்விகளுக்கு ஆம், இல்லை என சரியாக பதிலளியுங்கள் என கண்டிப்புடன் அறிவுறுத்தினார். தொடர்ந்து இந்த வழக்கு நேற்றும் விசாரணைக்கு வந்தது. நேற்று விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இரண்டு நாட்கள் நடந்த விசாரணையில் 150 கேள்விகளுக்கு விஷால் பதிலளித்துள்ளார். தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்., 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.