ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் மிஷன் : சாப்டர் 1. ஒரு உளவாளியின் கதையை மையப்படுத்தி வெளியான இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் கன்னட நடிகராக பரத் போபண்ணா. கன்னடத்தில் தற்போது வளர்ந்து வரும் நடிகரான இவர் தமிழைத் தொடர்ந்து மலையாளத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார். மலையாள இளம் நடிகர்களான லியோ புகழ் மேத்யூ தாமஸ், பிரேமலு புகழ் சங்கீத் பிரதாப் மற்றும் அர்ஜூன் அசோகன் ஆகியோர் இணைந்து நடித்து வரும் ப்ரொமான்ஸ் என்கிற படத்தில் இவர் வில்லனாக நடித்து வருகிறார்.
அருண் ஜோஸ் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். மலையாள படத்தில் நடிப்பது குறித்து பரத் போபண்ணா கூறும்போது, “மலையாளத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம் போன்ற படங்கள் மொழிகளையும் தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றன. மலையாள திரையுலகம் தற்போது முழு வீச்சில் இயங்கி வருகிறது. இதுதான் மலையாளத்தில் நுழைவதற்கு சரியான சமயம்” என்று கூறியுள்ளார்.