ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
நடிகர் தனுஷ் தானே இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ள நிலையில் தற்போது தனது 41வது பிறந்தநாளில் அடி எடுத்து வைத்துள்ளார். இதை அடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்தன. அது மட்டுமல்ல தனுஷ் தற்போது தெலுங்கில் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்து வரும் அவரது 51வது படமான குபேரா படத்திலிருந்து தனுஷின் கதாபாத்திர போஸ்டர் ஒன்றும் அவரது பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டிருந்தது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் ராஷ்மிகா.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இத்தனை நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றாலும் தனுஷ் உடன் இணைந்து ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் எங்கள் படப்பிடிப்பு நடைபெற்ற இடங்கள் எல்லாமே புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற போட்டோஜெனிக் இடங்களாக இருந்ததில்லை. அந்த வருத்தம் எனக்கு உண்டு. ஆனால் இந்த போஸ்டர் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அதனால் இதை பகிர்ந்து கொண்டு உங்களுக்கு மகிழ்ச்சியாக பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா.