அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
பாலாஜி கேசவன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா, ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எமக்கு தொழில் ரொமான்ஸ்'.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(ஜூலை 27) சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், பெப்ஸி தலைவர் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகன் அசோக் செல்வன், கதாநாயகி அவந்திகா மிஷ்ரா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் திருமலை, “படத்தை முடிப்பதற்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் போராடி போராடி ஒரு நடிகரையும், நடிகையையும் தேடி அலைவது இருக்கிறதே கொடுமையின் உச்சம். படத்தின் நடிகர் அசோக் செல்வனும் ஒரு படம் தயாரித்திருக்கிறார். அவருக்கு எவ்வளவு பணம் தர வேண்டுமா அந்த பணத்தைக் கொடுத்துவிட்டு தேதி கேட்டேன். அன்று அவருக்கு 31 லட்சம் கொடுத்தேன். இன்று அவருடைய சம்பளம் 2 கோடி, 3 கோடி. வாங்கட்டும், சந்தோஷம். அந்த 31 லட்சத்துக்கு வட்டி போட்டால் கூட ஒரு கோடி வரும். தயாரிப்பாளரைத் திரும்பிப் பார்க்காத எந்த நடிகரும் உச்சிக்குப் போக மாட்டார்கள்.
உங்களுக்குப் பிடிச்சிதானே இந்தப் படத்துல நடிக்க வந்தீங்க. ஒரு இரண்டு மணி நேரம்… ஒன்றரை மாசமா கேட்டுக்கிட்டு இருக்கோம், சொல்றன் சொல்றன்னு சொல்லிட்டு இருந்தாரு. இந்தப் படத்துக்கு வந்து அவரு புரமோட் பண்ணணும். ஒரு படம் ஓடுச்சின்னா அதிகம் சம்பாதிக்கப் போறது நடிகர்தான். ஒரு இயக்குனருக்குப் பக்கபலமே, அதில் நடிக்கும் நடிகர்கள்தான்” என்று காட்டமாகப் பேசினார்.