ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் |

வேலுார் : ''நான் படிக்கவில்லையே என்ற குற்ற உணர்வு இன்னும் எனக்கு இருக்கிறது,'' என, நடிகர் பாக்யராஜ் பேசினார்.
வேலுார் மாவட்டம், அரியூரில், நாராயணி கல்லுாரிகளின் குழுமத்தில் பயின்ற நர்சிங் மாணவ, மாணவிகள் மற்றும் ஆய்வக பணியாளர்கள் உள்ளிட்ட பல துறைகளில் படிப்பை முடித்தவர்களுக்கு, பட்டங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி தலைமை வகித்தார்.
திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: மாணவர்களாகிய நீங்கள் நல்ல படியாக படிப்பை முடித்துள்ளீர்கள். ஆனால், நான் படிக்கவில்லையே என்ற குற்ற உணர்வு இன்னும் என்னிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும், சினிமாவில் ஏதோ ஒன்றை செய்தோம் என்ற ஆத்ம திருப்தியை அடைந்துள்ளேன். செவிலியர், டாக்டர் பணி என்பது மிகவும் பொறுமை தன்மையும், சேவை மனப்பான்மையுடனும், மக்களுக்கு சேவை செய்யும் பணி. இதை சிறப்பாக செய்து வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு பேசினார்.