ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
மலையாள திரை உலகில் பிரபல கதாசிரியரும் இயக்குனருமான எம்டி வாசுதேவன் நாயர் எழுதிய ஒன்பது கதைகள் தற்போது மனோரதங்கள் என்கிற பெயரில் ஆந்தாலஜி படமாக உருவாகியுள்ளது. இந்த ஒன்பது கதைகளை எட்டு மலையாள முன்னணி இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். இதில் இயக்குனர் பிரியதர்ஷன் மட்டும் ஒளவும் தீரவும் மற்றும் சில லிகிதங்கள் என இரண்டு கதைகளை இயக்கியுள்ளார். இதில் ஒளவும் தீரவும் கதையில் மோகன்லால் மைய கதாபாத்திரமாக நடித்துள்ளார். அது மட்டுமல்ல இந்த ஆந்தாலாஜி படத்தில் மம்முட்டி, கமல், பஹத் பாசில், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.
எம்டி வாசுதேவன் நாயரின் கதைகளை இயக்குவது தனது நீண்ட நாள் கனவு என்றும், அது தற்போது நனவாகியுள்ளது என்றும் கூறியுள்ளார் பிரியதர்ஷன். என்னை பற்றி எப்போதும் எம்டி வாசுதேவன் நாயரிடம் மோகன்லால் பேசிக் கொண்டிருப்பார், அவர் மூலமாகவே எம்டி வாசுதேவ நாயரின் இரண்டு கதைகளை படமாக்கும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியம். அதிலும் வாசுதேவன் நாயர் கதை என்றால் எப்போது கூப்பிட்டாலும் நான் தயார், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தேதிகளை அட்ஜஸ்ட் செய்து ஒதுக்கித் தருகிறேன் என்று மோகன்லால் கூறியிருந்தார்.
இந்த ஆந்தாலஜி படத்தின் இரண்டு கதைகள் என்னிடம் வந்தபோது அதில் ஓலவும் தீரவும் படத்திற்கு மோகன்லால் சரியாக இருப்பார் என நினைத்து அவரை அழைத்ததுமே சொன்னது போலவே வந்து நடித்துக் கொடுத்தார்” என்று கூறியுள்ளார் பிரியதர்ஷன். மலையாளத்தில் மோகன்லாலை வைத்து கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.