இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டு சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.
அதேசமயம் இவர்களது மகள் மீனாட்சி பெற்றோரின் விவாகரத்திற்கு பிறகு தனது தந்தை திலீப் மற்றும் சிற்றன்னை நடிகை காவ்யா மாதவன் இருவருடன் தான் இணைந்து வசித்து வருகிறார். அதேசமயம் இத்தனை வருடங்களில் அவர் தனது தாய் மஞ்சு வாரியரை சந்தித்த ஒரு புகைப்படமோ அல்லது அவரைப் பற்றி பேசிய ஏதாவது ஒரு வீடியோவோ ஒன்று கூட சோசியல் மீடியாவில் வெளியானது இல்லை. அதனால் இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கிறார்களா என்கிற சந்தேகம் இப்போது வரை பலருக்கும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் மீனாட்சி தனது தாய் மஞ்சு வாரியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வெளியானது. ஆனால் நிஜத்தில் மஞ்சு வாரியர் தான் தனது மகள் மீனாட்சியை இன்ஸ்டாகிராமில் நீண்ட நாளைக்கு முன்பிருந்தே பின் தொடர்கிறார் என்றும், ஆனால் மீனாட்சி தனது தாயை பின் தொடரவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாக்டர் படிப்பை முடித்து பட்டம் பெற்ற மீனாட்சி அந்த மகிழ்ச்சியை தனது தந்தை திலீப் மற்றும் சிற்றன்னை ஆகியோருடன் சேர்ந்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டார். திரையுலகில் இருந்து பலரும் மீனாட்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் மஞ்சு வாரியர் இதுவரை தனது மகளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.