மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

முன்னணி கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி. அவனே ஸ்ரீமன் நாராயணா, 777 சார்லி, சப்த சாக்ரதாச்சே எல்லோ படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். அவர் தயாரித்து நடித்த 'பேச்சிலர் பார்ட்டி' என்ற படம் கடந்த ஜனவரி மாதம் தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தில் அனுமதி இல்லாமல் இரண்டு கன்னட பாடல்களை பயன்படுத்தியதாக காப்புரிமை சட்டத்தின் கீழ் ரக் ஷித் ஷெட்டி மற்றும் அவரது பட தயாரிப்பு நிறுவனம் மீது மியூசிக் நிறுவனம் ஒன்று போலீசில் புகார் அளித்தது.
“காலி மாது' படத்தில் இடம் பெற்ற 'நியாய எல்லிடே மற்றும் ஓம்மே நின்னான்னு' ஆகிய பாடல்களை எங்களிடம் அனுமதி பெறாமல் பேச்சிலர் பார்ட்டி படத்தில் ரக் ஷித் ஷெட்டி பயன்படுத்தி உள்ளார். இதனால் எங்களுக்கு மன உளைச்சலும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த புகாரின் பேரில் ரக் ஷித் ஷெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரு உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு ரக் ஷித் ஷெட்டி மனு தாக்கல் செய்துள்ளார்.