ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'. படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 5ம் தேதி இப்படம் வெளியாகிறது.
இப்படத்திற்கான அனைத்து வியாபாரங்களும் முடிவடைந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் படத்தைத் தயாரித்துள்ள நிறுவனமான ஏஜிஎஸ் சுமார் 100 கோடிக்கும் அதிகமாக 'டேபிள் பிராபிட்' பார்த்துவிட்டதென சொல்கிறார்கள்.
விஜய் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'லியோ' படத்துடன் ஒப்பிடும் போது சில கோடிகள் குறைவாகத்தான் வியாபாரம் நடந்துள்ளதாம். ஆனால், எந்த இடைஞ்சலும் இல்லாமல் படப்பிடிப்பை முடித்து இந்திய அளவில் தியேட்டர் உரிமை விற்பனை, வெளிநாட்டு உரிமை விற்பனை, சாட்டிலைட், ஓடிடி உரிமை விற்பனை என அனைத்தையும் எந்த சிக்கல் இல்லாமல் முடித்துவிட்டார்களாம்.
படம் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுவிட்டால் படத்திற்கான லாப வருமானம் அதிகமாக இருக்கும் என்று படத்தை வாங்கியவர்களும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்களாம்.