சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கூழாங்கல் படத்தின் மூலம் கவனிக்க வைத்தவர் இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ். அடுத்ததாக இவர் இயக்கி உள்ள படம் கொட்டுக்காளி. சூரி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அன்னா பென் நடித்திருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். வாழ்வியல் தொடர்புடைய யதார்த்த படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் சமீபத்தில் பெர்லின் திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கேற்று பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி படம் வெளியாக உள்ளது.