சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு சென்னையில் உள்ள ஆர்கே நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின் போது போட்டியிட தயாரானார் விஷால். ஆனால் அவரது வேட்பு மனு அப்போது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதோடு விரைவில் கட்சித் தொடங்குவேன் என்று தொடர்ந்து கூறி வருகிறார் விஷால்.
இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது : தமிழ்நாட்டில் இரண்டு ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள விஷால், எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இதையே தான் செய்கிறார்கள். சினிமா துறை மிகவும் கஷ்டப்படுகிறது. சிறிய படங்களை வாங்குவதற்கு யாருமே முன் வருவதில்லை.
சினிமா துறையில் அரசு தலையிடுவது குறித்து கேட்கப்பட்ட போது, அரசு ஏன் சினிமாவுக்குள் வர வேண்டும். கடந்த ஆட்சியில் யாரும் சினிமாவுக்குள் வரவில்லை. அவர்கள் வர வேண்டிய அவசியம் இல்லை. சினிமா துறை சினிமா துறையாக மட்டுமே இருந்துவிட்டு போகட்டும்.
2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் அரசியலுக்கு வர வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் அரசியலுக்கு வாருங்கள் என்று சொன்னால் வந்து தான் ஆக வேண்டும். அதோடு மக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைத்தால் நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் கஷ்டப்படுவதால் தான் அவர்கள் குறையை தீர்க்க வேண்டும் என்று நாங்கள் அரசியலுக்கு வர நினைக்கிறோம் என்கிறார் விஷால்.