ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சிறிய வேடங்களில் நடித்து வந்தார். அவர் நடித்து பாப்புலர் ஆனதை விட தெலுங்கு இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி பாப்புலர் ஆனதுதான் அதிகம். தமிழில் நடிகர் ராகவா லாரன்ஸ், விஷால், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.
சமீபகாலமாக அவர் அமைதியாக இருந்து வருகிறார். என்றாலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் அனிதா பற்றி முன்பு அவர் வெளியிட்ட கருத்துகள் இப்போது அவருக்கு எதிராக வந்து நிற்கிறது.
கர்னூலை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் நாகராஜூ அவதூறு வீடியோ வெளியிட்ட ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3வது நகர போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படாலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.