2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

‛பக்த துருவ மார்க்கண்டேயா' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அஸ்வினி. பின்னர் 'பலே தம்முடு' என்ற படத்தின் மூலம் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயின் ஆனார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் தமிழில் கற்பூர தீபம், மாட்டுக்கார மன்னாரு, கண்மணியே பேசு, எடுத்த சபதம் முடிப்பேன், தர்மா, கும்பகோணம் கோபாலு, மானசீக காதல், உனக்காக எல்லாம் உனக்காக, என்னம்மா கண்ணு, பெண்கள், பிரியாத வரம் வேண்டும், மிட்டா மிராசு, ஆட்ட நாயகன் போன்றவற்றில் இவர் நடித்துள்ளார். பார்திபனுடன் பொண்டாட்டி தேவை படத்தில் நடித்தார்.
தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் திடீரென்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பாதித்த பணம் அனைத்தும் கரைந்து போகவே வறுமையில் தள்ளப்பட்டார். 2012ம் ஆண்டு மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு 38 வயது. இறந்த அஸ்வினியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லக்கூட பணமின்றி தவித்துள்ளனர். பார்த்திபன் அதற்கு உதவி செய்துள்ளார். அவ்வப்போது அஸ்வினி குடும்பத்திற்கும் உதவி உள்ளார். அஸ்வினியின் மகன் படிப்பு செலவும் பார்த்திபன் ஏற்றுக் கொண்டிருப்பதாக சொல்வார்கள்.