சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

90ஸ் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக வளம்வந்தவர் நடிகை ரம்பா. டாப் இடத்தில் இருக்கும்போது சினிமாவை விட்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து விட்டார். அதற்கு பிறகு சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்து கொண்ட இவர் தினமலர் நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:
நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என என் குழந்தைகள் கேட்டு வந்தனர். அதனை விஜயிடம் தெரிவித்தேன். அதன்படி, சமீபத்தில் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் குழந்தைகள் அவரின் ரசிகர்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ‛நினைத்தேன் வந்தாய்' படத்தில் நான் நடித்தபோது பார்த்த அதே போலவே இப்போதும் விஜய் அதே போன்று இருக்கிறார். ஆனால் அந்த படத்தில் நடித்தபோது அமைதியாக இருப்பார், இப்போது என் குழந்தைகளுடன் நன்றாக பேசி பழகினார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது நான் கனடாவில் இருந்தேன். அவர் அரசியலுக்கு வருவது துணிச்சலான முடிவு. நான் சினிமாவில் நடித்து 25 ஆண்டுகள் ஆனாலும், நீண்ட இடைவெளி விட்டுவிட்டேன். பெரும்பாலான பிடித்த ஹீரோக்களுடன் ஏற்கனவே நடித்துவிட்டேன். இந்தாலும், இனிமேல், நடிப்பதென்றால் பிடித்தமான ஹீரோ, பிடித்தமான ரோல் கிடைத்தால் நடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.




