பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
நடிகர் நிவின்பாலி தமிழில் ராம் இயக்கத்தில் நடித்துள்ள ‛ஏழு கடல் ஏழு மலை' படம் கடந்த சில வருடங்களாகவே தயாரிப்பில் இருந்து வருகிறது. தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு வரவேற்பு பெற்று வருகிறது. அதே சமயம் மலையாளத்தில் முன்பு போல வருடத்திற்கு மூன்று படங்கள் என்கிற ரீதியில் பிஸியாக நடித்து வருகிறார் நிவின்பாலி. இந்த நிலையில் தற்போது அவர் ஒரு மாற்றத்திற்காக வீடியோ ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார். ஹபிபி ட்ரிப் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஆல்பம் தற்போது வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் ரிபின் ரிச்சர்டும் ரேப்பர் டாப்சியும் இணைந்து இந்த ஆல்பத்திற்கான பாடலை உருவாக்கியுள்ளனர். இந்த ஆல்பத்தை சாஹின் ரஹ்மான் மற்றும் நிகில் ராமன் என்கிற இருவரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த இசை ஆல்பத்தில் கிட்டத்தட்ட பல வருடங்களுக்கு முன்பு பார்த்த இளம் நிவின்பாலியை மீண்டும் பார்ப்பது போல விதவிதமான ஸ்டைலிசான தோற்றங்களில் மனிதர் அசத்துகிறார்.