சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. காதலித்த நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே பிரிந்து விட்டார்.
கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்தார். தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் 'சிட்டாடல்' வெப் சீரிஸில் நடித்ததற்குப் பின் ஓய்வெடுத்து சிகிச்சை பெற ஆரம்பித்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் மீண்டும் நடிக்க வருவது பற்றி பேசியிருக்கிறார். “புதிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்கான பயிற்சியை ஆரம்பித்துவிட்டேன். நான் நடிக்க சம்மதித்துள்ள படங்கள் புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் தருகிறது. அவற்றை நான் நேசிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சில தமிழ்ப் படங்களில் நடிக்கவும் சமந்தா சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது. விரைவில் அந்தப் படங்கள் பற்றிய அறிவிப்புகள் வரலாம்.