போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

ஹிந்தி திரையுலகில் ஒரு காலத்தில் காதல் மன்னன் என்று பெயர் பெற்றவர் இம்ரான் ஹாஷ்மி. இவரை 'சீரியல்கிஸ்ஸர்' என்றும் அழைத்தனர். காரணம் இம்ரான் ஹாஷ்மி எல்லா படங்களிலும் நாயகியை உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சிகளில் நடித்தார். தற்போது வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று நடிகர், நடிகைகள் குறித்து ஒரு வரியில் பதில் அளித்தார். ஐஸ்வர்யாராய் என்றதும் 'பிளாஸ்டிக்' என்றார். இது சர்ச்சையானது.
ஐஸ்வர்யா ராயை பிளாஸ்டிக் என்றுஅவதூறாக எப்படி சொல்லலாம் என்று அவரது ரசிகர்கள் இம்ரான் ஹாஷ்மியை கடுமையாக திட்டியும், கண்டித்தும் வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்டனர்.
இதையடுத்து ஐஸ்வர்யாராயிடம், இம்ரான் ஹாஷ்மி மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஐஸ்வர்யா ராய் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏதோ ஜாலியாக அந்த வார்த்தையை சொல்லிவிட்டேனே தவிர, நானும் ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகன்தான். அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. எனது பேச்சு யாரையேனும் புண்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள்' என்று குறிப்பிட்டு உள்ளார்.