போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

முன்னணி தெலுங்கு இயக்குனர் சேகர் காமுலா. ஆனந்த், ஹேப்பி டேய்ஸ், கோதாவரி, லீடர், லைப் இஸ் பியூட்டிபுல், அனாமிகா உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர். தற்போது அவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் இயக்கி வரும் படம் 'குபேரா'. இதில் தனுஷ், நாகார்ஜூனா இணைந்து நடிக்கிறார்கள். தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
'குபேரா'வில் இருந்து தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகியோரின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் ராஷ்மிகாவின் தோற்றம் ஒரு சிறிய வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அடர்ந்த காட்டுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு சூட்கேசை ராஷ்மிகா தோண்டி எடுக்கிறார். அதை திறந்து பார்க்கும்போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருக்கிறது. அதை ஆச்சர்யத்தோடு பார்க்கும் அவர் அதை எடுத்துக் கொண்டு செல்கிறார்.
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி உள்ளது. இது கொள்ளை தொடர்பான கதை என்றும், ராஷ்மிகா நடிக்கும் கேரக்டர் பற்றியும் பல்வேறு யூகங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெளியிட்டு வருகிறார்கள். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம்மோகன் ராவ் இணைந்து தயாரிக்கின்றனர்.