பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' படம் 28 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இதனை ஷங்கர் இயக்கி உள்ளார், லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் கமலுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர், விவேக், மனோபாலா உள்பட பலர் நடித்திருக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
வருகிற 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதை யொட்டி படத்தின் புரமோசன் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. கமல்ஹாசன் உள்ளிட்ட பட குழுவினர், மும்பை, ஐதராபாத், மலேசியா உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணம் செய்து படத்தை புரமோட் செய்து வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக துபாயில் ஸ்கை டைவிங் மூலம் இந்த படத்தினை படக்குழு புரோமோசன் செய்துள்ளது. ஸ்கை டைவிங் வீரர் ஒருவர் சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து குதித்து இந்தியன் 2 பேனர் இருந்த கொடியை பிடித்திருக்க அதனை இன்னொரு வீரர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது.