முருகன் பாடலை விஜய் உடன் ஒப்பிட்டு பாடிய சர்ச்சை : மன்னிப்பு கேட்ட பாடகர் வேல் முருகன் | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் | விஜய், அஜித், சிரஞ்சீவிக்கு சென்ற ‛சிலம்பாட்டம்' படக் கதை | தனுஷ் 55ல் இணைந்தார் மம்முட்டி | படம் இயக்க தயாராகும் நவ்யா நாயர் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் உச்சத்தை தொட்ட நடிகை | 'நந்தன்' இரண்டாம் பாகம் தயாராகிறது : இயக்குனர் தகவல் | தணிக்கையில் ‛யு' சான்றிதழ் பெற்ற ‛வித் லவ்' | பழைய காதல் பிரேக்கப் குறித்து பேசிய மிருணாள் தாக்கூர் | 2வது சிம்பொனி: அப்டேட் கொடுத்த இளையராஜா |

சுந்தர். சி இயக்கி நடித்த அரண்மனை-4 வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், அடுத்து அவர் ஹீரோவாக நடித்துள்ள ‛ஒன் டூ ஒன்' என்ற படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது. அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்திருக்கும் இந்த படத்தை திருஞானம் இயக்கி உள்ளார். விஜய் வர்மன், நீது சந்திரா, ராகினி திரிவேதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க சுந்தர். சிக்கும், வில்லன் அனுராக் காஷ்யப் ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் அதிரடி மோதலை மையமாக கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது.
‛முயற்சி செய்யாதவனுக்கு தோல்வி கூட கிடைக்காது, ஆனால் எனக்கு தோல்வி கிடைச்சாலும் முயற்சி செய்யாமல் விடமாட்டேன். ஒரு உசுரோட பசிக்கு இன்னொரு உசுர இரையா படச்சவன்டா உங்க கடவுள், அவன் கிட்ட இன்னுமாடா கருணையை எதிர்பார்க்கிறீங்க. உன் கதையில நீ ஹீரோன்னா, உனக்கு நான்தான்டா வில்லன்' என்பது போன்ற அதிரடியான வசனங்கள் இந்த ஆக்சன் பட டிரைலருக்கு மேலும் வலு சேர்த்து உள்ளது.