ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
2024ம் ஆண்டில் அடுத்து வரும் வாரங்களில் சில பல பெரிய படங்கள் வெளியாக உள்ளன. ஜுலை 12ம் தேதி 'இந்தியன்', ஜுலை 27ம் தேதி 'ராயன்', செப்டம்பர் 5ம் தேதி 'தி கோட்', அக்டோபர் 10ம் தேதி 'கங்குவா', அக்டோபர் மாதத்தில் 'வேட்டையன்' ஆகிய படங்களின் வெளியீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'வேட்டையன்' படமும் அக்டோபர் 10ம் தேதிதான் வெளியாகும் என்று தெரிகிறது.
இப்படி சில முக்கிய படங்களின் வெளியீடுகள் பற்றி வந்த அறிவிப்புகள் அந்தந்த நடிகர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. குறிப்பாக சூர்யா ரசிகர்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த 'கங்குவா' பட வெளியீட்டு அறிவிப்பு நேற்று வெளியானதை அவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதே சமயம் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தின் அறிவிப்பை வெளியிடாமல் இருப்பது விக்ரம் ரசிகர்களைக் கோபப்படுத்தியுள்ளது. இப்படங்களின் வெளியீடு பற்றி நேற்றுதான் நாம் குறிப்பிட்டிருந்தோம். நாம் சொன்னது அவர்கள் காதில் விழுந்துவிட்டது போல, 'கங்குவா' படத்தின் அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்டார்கள். அது போல 'தங்கலான்' அறிவிப்பையும் விரைவில் வெளியிட்டால் கடும் வெறுப்பில் இருக்கும் விக்ரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
அடுத்து கார்த்தி நடிக்கும் 'மெய்யழகன், வா வாத்தியார்', சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' ஆகிய படங்களின் வெளியீட்டு அறிவிப்புகளை ரசிகர்கள் கேட்கலாம்.