விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஏழு கடல் ஏழு மலை'. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்தும் இன்னும் வெளியாகவில்லை. பல்வேறு திரைப்பட விழாக்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறது.
ஏற்கனவே இப்படம் 53 வது ரோட்டர்டாம் உலகத் திரைப்பட விழா மற்றும் மாஸ்கோ சர்வதேச ஆகிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இந்த நிலையில் இப்போது 74வது டரான்சில்வேனியா திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.