இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் ஜூலை பன்னிரண்டாம் தேதி திரைக்கு வருகிறது. இதே நாளில் அக்ஷய் குமார் நடிப்பில் சுதா இயக்கி உள்ள சர்பிரா ஹிந்தி படமும் திரைக்கு வருகிறது. இந்த படத்தை தயாரித்துள்ள சூர்யா, கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்தியன் 2 படம் திரைக்கு வந்து இரண்டு வாரத்திற்கு பிறகு ஜூலை 26ம் தேதி தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் திரைக்கு வருகிறது. தான் இயக்கி நடித்திருக்கும் 50-வது படத்தை ஹிட் படமாக கொடுத்து விட வேண்டும் என்பதற்காகவே பெரிய அளவில் போட்டியில்லாத களத்தில் இறக்கி விட வேண்டும் என்று திட்டமிட்டு வந்த தனுஷ், தற்போது ஜூலை 26ம் தேதி ராயனை வெளியிடுகிறார். தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜாவை போன்று தனது ராயன் படத்தையும் ஹிட் படமாக்கி விட வேண்டும் என்று அடுத்தபடியாக தீவிரமான பிரமோஷன்களில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார்.