குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி | 'டப்பா - ஆன்ட்டி' ரோல் சர்ச்சை…'அந்த' நடிகை மன்னிப்பு கேட்டார், சிம்ரன் | ஆண்கள் மட்டுமே நடித்துள்ள 'ஆகக் கடவன': நாளை ரிலீஸ் | மோகன்லாலின் வாழ்க்கை கதை புத்தகம்: டிசம்பரில் வெளியீடு | டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சம்மன்? | அட்லிக்கு டாக்டர் பட்டம்: சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்குகிறது |
அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23 வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். மேலும், விஜய் நடிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வல் வில்லனாக நடிக்கும் நிலையில், மலையாள நடிகர் பிஜு மேனனும் நடிக்கிறார். இவரை தொடர்ந்து மற்றொரு நடிகரும் இணைந்துள்ளார். ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்ற வேடத்தில் நடித்த ஷபீரும் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.