ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஸ்ரீனிக் புரொடக்ஷன் சார்பில் டி.பாலசுப்பிரமணி, சி.சதீஷ் குமார் தயாரிக்கும் படம் 'பிதா'. கார்த்திக் குமார் இயக்குகிறார். ராமராஜன் நடித்த 'சாமானியன்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்த வி.மதி இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். வனிதா விஜய்குமார், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சரவண சுப்பையா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ரஷாந்த் அர்வின் இசை அமைக்கிறார், பிராங்ளின் ரிச்சர்ட் ஒளிப்பதிவு செய்கிறார். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் தயாரிப்பாளரும், ஹீரோவுமான வி.மதி பேசியதாவது : இது வித்தியாசமான தருணம், நான் நடிகனாக அறிமுகமாகும் முதல் மேடை. இப்பொழுது நடிகனாக உங்கள் முன்னால் வந்திருக்கிறேன். உங்கள் முழு ஆதரவினை தர வேண்டுகிறேன். நீங்கள் எப்போதும் எனக்கு நல்ல ஆதரவைத் தந்து வந்திருக்கிறீர்கள். ஆனாலும் கடைசி படம் பெரிய அளவில் செல்லவில்லை, இருந்தும் ராமராஜனை மீண்டும் நடிக்க வைத்த பெருமை கிடைத்தது சந்தோஷம். என்றார்.