இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகும் 'துரந்தர் 2' | சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் |

தமிழ் சினிமாவின் முன்னணி குணசித்ர மற்றும் காமெடி நடிகர் சார்லி. சமீபத்தில் டாக்டர் பட்டம் பெற்ற சார்லி, தன்னம்பிக்கை பேச்சாளராகவும் இருக்கிறார். இவரது இளைய மகன் அஜய் தங்கசாமிக்கும், ஜே.பெர்மீசியா டெமிக்கும் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
மாலை மயிலாப்பூரில் உள்ள பாஸ்க்ட்ரல் சென்டரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. விருந்தினர்களை சார்லி, அவரது மனைவி அந்தோணியம்மான், மூத்த மகன் ஆதித்யா, மருமகள் அம்ரிதா ஆகியோர் வரவேற்றனர். திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்வு எளிய முறையில் நடந்தது.