அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
ஹீரோ- ஹீரோயின்களுக்கு இணையாக குணச்சித்திர கேரக்டர்களையும் ரசிகர்கள் கொண்டாடிய படங்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். ஒருசில சீன்களில் மட்டும் வந்து சென்றாலும் அந்த கேரக்டர்கள் பேசப்படும். அது தான் சிறந்த குணசித்திர கேரக்டர்களுக்கான அங்கீகாரம். அந்த வகையில் அம்மா, அக்கா, மனைவி, மாமியார், சித்தி கேரக்டர்களில் நடித்து பல்வகை திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை திண்டுக்கல் நான்ஸி.
சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக நம்மிடம் அவர்...
அழகியல், நடிப்பு ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. இரண்டும் எனக்கு பிடித்த துறை என்பதால் பியூட்டிஷியனாக இருக்கும் எனக்கு நடிப்பிலும் ஆர்வம் ஏற்பட்டது. 2019 முதல் சினிமாவில் பட்ஜெட் படங்களில் அம்மா, அக்கா, மனைவி, மாமியார் என குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறேன்.
நான் நடித்த முதல் படம் 'மிஸ்டர் ஜூ கீப்பர்'. இதில் நடிகர் சிங்கம்புலியின் மனைவியாக நடித்துள்ளேன். பின் 'நாற்கரப்போர்', 'நாதமுனி', 'வீராயி மக்கள்', 'கருடன்', 'பிரேக் பாஸ்ட்' உட்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். 'கருடன்' தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் ரியோ ஹீரோவாக நடித்துள்ள 'பிரேக் பாஸ்ட்' படத்தில் ஹீரோவுடன் பயணிக்கும் 'லேடி கான்ஸ்டபிள்' ரோலில் நடித்துள்ளேன். அப்படம் திரைக்கு வந்த பின் குணச்சித்திர வேடங்கள் வரிசையில் எனக்கு ஒரு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தற்போது கிரியேட்டிவ் ஆக 'ரீல்ஸ் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறேன். 'ரீல்ஸ்'யை பார்த்து தான் நடிகர் லுாயிஸ் என்னை தொடர்புகொண்டு உங்களுக்கு 'போட்டோ பேஸ்' நன்றாக உள்ளது. சினிமாவில் நடிக்க முயற்சி செய்யுங்கள் என ஆசையை துாண்டினார்.
மதுரையை சேர்ந்த நடிகர் விக்டர், சென்னை செல்வம், 'நாற்கரப்போர்' உதவி இயக்குநர் மணிகண்டன் என பலரும் எனக்கு உதவி செய்வதால் பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. 'நுாலாம்படை' படத்தில் ஹீரோவின் அம்மா, பெயரிடாத சில படங்களில் 'கேரக்டர் ரோல்களில்' தற்போது நடித்து வருகிறேன்.
சிறிது, பெரிது என எந்த ரோல் வாய்ப்பு கிடைக்குதோ அதை அர்ப்பணிப்புடன் ஏற்ற நடிக்கிறேன். தமிழ் திரையுலகில் கோலோச்சிய நடிகை மனோரமா, கேரக்டர் ரோல்களில் நடிக்கும் கோவைசரளா, சரண்யா என பலர் குணசித்திர நடிப்பை வெளிப்படுத்தினர். அவர்கள் போன்றே, ரசிகர்கள் மறக்க முடியாத ரோலில் சாதிக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.
சினிமாவில் பெண்கள் நடிக்க ஏராள தடைகளை தாண்ட வேண்டியிருக்கும். அதுக்கெல்லாம் ஒருவகை 'தில்' வேண்டும். அது எனக்கு சற்று அதிகமாகவே உள்ளது என்கிறார் இந்த 'நம்பிக்கை' நான்ஸி.