மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
சினிமாவின் ஆரம்ப காலத்தில் படத்தில் பின்னணி பாடகர், பாடகிகள் கிடையாது. நடிப்பவர்களே பாட வேண்டும். இதனால் பாடும் திறன் உள்ளவர்கள்தான் அன்று நடிகர், நடிகையாக முடியும். இப்படியான சூழ்நிலையில் தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகி ஆனார் பி.ஏ.பெரிய நாயகி.
பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை என்ற ஊரில் பிறந்தவர் பெரிய நாயகி. தாயார் ஆதிலட்சுமி, கர்நாடக சங்கீதப் பாடகியாக இருந்தார். இலங்கைக்குக் கச்சேரிகள் பாடச் சென்ற அவர், அங்கே சங்கீத ஆசிரியையாக மாறினார். இதனால் குடும்பம் இலங்கைக்குக் குடிபெயர்ந்தது. ஆதிலட்சுமிக்கு பாலசுப்பிரமணியன், ராஜாமணி, பெரியநாயகி என மூன்று பிள்ளைகள். மூவரையுமே சங்கீதத்தில் பழக்கினார் ஆதிலட்சுமி. தாயார் மூலம் அடிப்படை சங்கீத ஞானம் பெற்றிருந்தாலும் பத்தமடை சுந்தர ஐயரிடம் ராஜாமணியும், பெரியநாயகியும் முறையாகச் சங்கீதம் பயின்றனர்.
மேடைகளில் பாடத் தொடங்கிய பெரியநாகி சினிமாவில் சிறு சிறு வேடங்களிலும் நடித்து வந்தார். அப்போது முன்னணி தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்த ஏவிஎம் செட்டியார் 1945ம் ஆண்டு 'ஸ்ரீவள்ளி' படத்தை இயக்கினார். அதில் டி.ஆர் மகாலிங்கம் நாயகன், குமாரி ருக்மணி நாயகி, இருவரும் படத்தில் பாடி நடித்தனர். படத்தின் முதல் பிரதியை போட்டு பார்த்த செட்டியார் அதிர்ச்சி அடைந்தார். காரணம் டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு குமாரி ருக்மணியின் குரல் அமைந்திருக்கவில்லை.
அப்போதுதான் 'போஸ்ட் சிங்னரைசேஷன்' என்ற தொழில்நுட்பம் வெளிநாட்டில் அறிமுகமாகி இருந்தது. இதை வரவழைத்த செட்டியார், குமாரி ருக்மணி பாடிய அனைத்து பாடல்களையும் பெரியநாகியை பாட வைத்து அதை கச்சிதமாக பிலிமில் பொருத்தினார். பெரிய நாயகி பாடிய பாடல்களுக்கு ருக்மணியின் வாயசையும் சரியா பொருந்த பாடல்களாலேயே படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படித்தான் பின்னணி பாடகி ஆனார் பெரிய நாயகி. அதன்பிறகு அந்த காலகட்டத்தில் முன்னணி பாடகியாக திகழந்தார் பெரியநாயகி. அவரின் 34வது நினைவுநாள் இன்று.