2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், மாண்டி தொகுதியில் எம்.பி. ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கங்கனா ரணாவத்தை ஒரு பெண் சிஐஎஸ்எப் அதிகாரி கன்னத்தில் அறைந்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் தான் நலமாக உள்ளதாக கங்கனா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தான் தாக்கப்பட்டது குறித்து எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்காத பாலிவுட் மீது கங்கனா தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் ஒரு பதிவிட்டிருந்தார். ஆனால், அதை பின்னர் டெலிட் செய்துவிட்டார். இருந்தாலும் அவரது பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்திருந்த பலர் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
கங்கனா தாக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. இயக்குனர் ராம்கோபால் வர்மா மட்டுமே கங்கனா தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பதிவு செய்துள்ளார்.