மீண்டும் ஹிந்திப் படத்தில் விஜய் சேதுபதி : இயக்குனர் யார் தெரியுமா? | ஜெயம் ரவி - ஆர்த்தி : தமிழ் சினிமாவின் அடுத்த பிரிவு? | இந்தியன் 2 டிரைலர் - எத்தனை தோற்றங்களில் கமல்ஹாசன்? | இது இரண்டாவது சுதந்திர போர் : ரசிகர்களின் கவனம் பெறும் ‛இந்தியன் 2' டிரைலர் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர் | ஆங்கிலத்தில் டப் ஆகும் மாநாடு | கார்த்தி படத்தில் ஆஷிகா ரங்கநாத் | காதல் எமோஜிகளை பதிவு செய்த நிவேதா தாமஸ் | தொடர்ந்து திரைப்பட விழாக்களுக்கு செல்லும் ஏழு கடல் ஏழு மலை படம் | 10 நாட்களில் ரூ. 81 கோடி வசூலை எட்டிய மகாராஜா |
செவன் மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ, சித்தார்த் நாயகனாக நடிக்கும் ‛மிஸ் யூ' படத்தை தயாரிக்கிறார். காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். 'மாப்ள சிங்கம்', 'களத்தில் சந்திப்போம்' போன்ற படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இப்படத்தை இயக்குகிறார்.
பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.