சர்ச்சை பேச்சு: பகிரங்க மன்னிப்பு கேட்ட மிஷ்கின் | அஜித்துக்கு பத்ம பூஷன் விருது: திரையுலகினர் வாழ்த்து | 50 நாளை நிறைவு செய்த 'புஷ்பா 2' | அரசியலுக்கு வருகிறாரா திரிஷா? லேட்டஸ்ட் தகவல் | ராஜமவுலி படத்துக்காக சிங்கத்துடன் சண்டை போடும் மகேஷ் பாபு! | ஹிந்தி ஆடியன்சை குறி வைக்கும் நாகசைதன்யா- சாய் பல்லவியின் தண்டேல்! | ஆங்கிலத்திலும் வெளியாகும் ரஜினியின் ஜெயிலர்-2 | அஜித்துக்கு பத்மபூஷண்…. வாழ்த்துவதில் ஏன் பாரபட்சம்…. | பிளாஷ்பேக்: சாதுர்யமிக்க இயக்கத்தால் சாதனை படைத்த “சாந்த சக்குபாய்” | விஜய்யின் கடைசி படம் ‛ஜனநாயகன்': பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு |
தமிழ் சினிமாவில் பேய்ப் படங்களின் வருகையை ஆரம்பித்து வைத்த படம் என்றால் 2007ம் ஆண்டில் வந்த 'முனி' படம்தான். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ராஜ்கிரண், ராகவா லாரன்ஸ், வேதிகா மற்றும் பலர் நடித்தனர். இப்படம் பெரிய வெற்றியைக் குவித்தது.
அதற்கடுத்து அந்தப் படத்தின் அடுத்த பாகத்தை இயக்கும் போது அதற்கு 'காஞ்சனா' எனப் பெயர் வைத்தார் ராகவா லாரன்ஸ். அதன்பின் குழந்தைகள் கூட 'காஞ்சனா பேய்' என அழைக்க ஆரம்பித்ததால் அதற்கடுத்த பாகங்களும் காஞ்சனா 2, காஞ்சனா 3 என்ற பெயரிலேயே வெளிவந்தது.
'முனி' என்ற முதல் பாகத்தின் தொடர்ச்சி என்று பார்த்தால் 'முனி' 4ம் பாகமாக 'காஞ்சனா 3' படம் 2019ல் வெளிவந்தது. இப்போது 'காஞ்சனா 4'ம் பாகத்தை ராகவா லாரன்ஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.
சமீபத்தில் சுந்தர் சி இயக்கிய நடித்து வெளிவந்த 'அரண்மனை 4' படம் வெற்றி பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதனால்தான் 'காஞ்சனா 4' படத்தையும் தைரியமாக எடுக்க உள்ளதாகத் தெரிகிறது.
2025ம் ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.