‛மஜா' பட இயக்குனர் ஷபி மறைவு | பெயரை சுருக்கும்படி நிர்ப்பந்தித்தார்கள் ; கவுதம் வாசுதேவ் மேனன் | லூசிபர் 3ம் பாகமும் இருக்கு ; தன்னை அறியாமல் அப்டேட் கொடுத்த பிரித்விராஜ் | முகராசி, ஆட்டோகிராப், 96 - ஞாயிறு திரைப்படங்கள் | நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு |
2024ம் ஆண்டு நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பல்வேறு கட்சிகளின் சார்பில் சில பிரபலங்கள் போட்டியிட்டனர். அவர்களில் சிலர் வெற்றி பெற்றுள்ளனர்.
கங்கனா ரணாவத்
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர். கடந்த சில வருடங்களாகவே பாஜக-வை தீவிரமாக ஆதரித்து வந்தார். அவருடைய சொந்த ஊரான ஹிமாச்சல் பிரதேசம், மாண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று எம்.பி. ஆகி உள்ளார்.
ஹேமமாலினி
ஹிந்தித் திரையுலகின் மூத்த நடிகை. ஏற்கெனவே பாஜக எம்.பி ஆக இருந்தவர். அவரது முந்தைய தொகுதியான உத்தரபிரதேச மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
சத்ருகன் சின்ஹா
ஹிந்தித் திரையுலகத்தின் மூத்த நடிகர் சத்ருகன் சின்ஹா. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மேற்கு வங்களாம் அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆகி உள்ளார்.
அருண்கோவில்
டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'ராமாயண்' தொடரில் ராமர் ஆக நடித்த அருண் கோவில் உத்தரப் பிரதேசத்தின் மீரட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
மனோஜ் திவாரி
போஜ்புரி நடிகரான மனோஜ் திவாரி, வடகிழக்கு டில்லி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ரவி கிஷன்
சமீபத்தில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய 'லாபட்டா லேடீஸ்' ஹிந்திப் பட நடிகரான ரவி கிஷன் பாஜக சார்பில் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆகி உள்ளார்.
சுரேஷ் கோபி
மலையாள நடிகரான சுரேஷ் கோபி, கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். அக்கட்சிக்கு முதன் முதலில் ஒரு எம்.பி. சீட்டை தனது வெற்றி மூலம் பெற்றுத் தந்துள்ளார்.
விஜய் வசந்த்
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் நடிகர் விஜய் வசந்த் மீண்டும் வெற்றி பெற்று எம்.பி. ஆகி உள்ளார்.
இவர்கள் தவிர பெங்காலி திரையுலகத்தைச் சேர்ந்த தேவ் அதிகாரி, ரச்சனா பானர்ஜி, ஜுன் மலியா, சதாப்தி ராய் ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேற்கு வங்காளத்தில் போட்டியிட்டு எம்.பி. ஆகி உள்ளார்கள்.
தோல்வியடைந்த வேட்பாளர்களில் தமிழகத்தில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ராதிகா சரத்குமார் குறிப்பிட வேண்டியவர்.