பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா, காஷ்மிரா, தியாகராஜன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'பி.டி. சார்'. இப்படத்திற்கு சுமாரான விமர்சனங்களும், வரவேற்புமே கிடைத்தது. இருந்தாலும் படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் இப்படத்தை வெற்றிப் படம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“எங்களின் 'பி.டி. சார்' படத்தின் வெற்றியில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று வருகை தந்து சிறப்பித்த நாயகன் ஹிப்ஹாப் தமிழா ஆதி, இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தை நேசிக்கும்படியாகக் கொடுத்த படக்குழுவினருக்கு எங்களது நிறுவனம் சார்பில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்களது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு அனைத்தும் உண்மையிலேயே பலன் கொடுத்துள்ளன. மேலும், உங்களது எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பி.டி. சார் படம் தற்போது இரண்டாவது வாரத்தில் ஒடிக் கொண்டிருக்கிறது.