'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்தாலும் அந்த படங்களின் மூலமாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நிவேதா பெத்துராஜ். நடிப்பு மட்டுமல்லாமல், பார்முலா கார் பந்தயத்திலும் பங்கேற்று கவனம் ஈர்த்தார். சமீபத்தில் பாட்மின்டன் போட்டியிலும் பங்கேற்று சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தினார். இப்படி பல்வேறு திறமைகளை பெற்றவர் நிவேதா பெத்துராஜ்.
தற்போது அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் நிவேதா பெத்துராஜின் காரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரின் கார் டிக்கியை திறக்கச் சொல்லி கேட்கிறார்கள். "சாலையில் செல்கிறேன். பேப்பர்கள் எல்லாம் சரியா இருக்கு” என்று நிவேதா பெத்துராஜ் சொல்லியும் போலீசார் கேட்கவில்லை.
'எங்களின் கடமை' எனக்கூறி, கார் டிக்கியை திறக்க வேண்டும் என சொன்னார்கள். ஆனால் சொல்வதைக் கேட்காமல், 'அதில் எதுவும் இல்லை, திறக்க முடியாது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் சார். இது மரியாதைக்குரிய விஷயம்' என்று நிவேதா கூறுகிறார். சாலையில் போலீசாருடன் நிவேதா பெத்துராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. இது உண்மையில் நடைபெற்றதா அல்லது ஏதேனும் படத்தின் புரமோஷனா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.




