தமிழில் மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி. அதேசமயம் 2007லிலேயே 'சிருங்காரம்' என்கிற தமிழ் படத்தில், பிரபலமாகாத தனது ஆரம்ப காலகட்டத்தில் நடித்திருந்தார் அதிதி ராவ். தற்போது முன்னணி நடிகையாக வளர்த்து விட்ட அவர், பாலிவுட்டில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஹிரா மண்டி வெப்சீரிஸில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பாராட்டுகளை பெற்று வருகிறார் அதிதி ராவ்.
இந்த நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் எட்டு வருடங்களுக்கு முன்பு அதாவது காற்று வெளியிடை படத்தில் அவர் நடிப்பதற்கு முன்பே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளியிட்டிருந்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த எட்டு வருடங்களில் அவர் எவ்வளவு மாறிவிட்டார் என்பது அந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கிறது.