ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

தனுஷ் தனது 50வது படமாக 'ராயன்' என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இத்திரைப்படம் ஜூன் 13ம் தேதி திரைக்கு வரும் என அறிவித்த நிலையில், கடந்த சில நாட்களாக இப்படம் தள்ளிப்போவதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இப்போது நமக்கு கிடைத்த தகவலின்படி, ராயன் படம் ஜூன் மாதத்தில் இருந்து ஜூலை 26ம் தேதிக்கு தள்ளிப் போவதாக தெரிவிக்கின்றனர். இதற்கு காரணமாக லோக்சபா தேர்தல் ரிசல்ட் பரபரப்பால் ராயன் படத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது எனத் தயாரிப்பு நிறுவனம் தள்ளி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.