பெப்சி வரம்பு மீறுகிறது: நடிகர் சங்கம் எச்சரிக்கை | ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி |
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவும் கடந்த 2019ல் தொரசாணி என்கிற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். கடந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான பேபி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அவர் நடித்துள்ள கம் கம் கணேசா என்கிற படம் வரும் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. இதைதொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டார்.
பொதுவாகவே விஜய் தேவரகொண்டாவின் தம்பி என்பதால் ஆனந்த் தேவரகொண்டா நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அந்த படத்தின் பிரீமியர் காட்சிகளில் எல்லாம் தவறாமல் கலந்து கொண்டு அவரை உற்சாகப்படுத்தி வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
அந்த வகையில் இந்த நிகழ்விலும் கலந்து கொண்ட ராஷ்மிகா மேடையேறி ஆனந்த் தேவரகொண்டாவுடன் இந்த படத்தின் பாடல் ஒன்றுக்கு சிறிது நேரம் நடனமும் ஆடினார். இதற்காக நடன அசைவுகளை அருகில் நின்று ஆடிய ஆனந்த் தேவரகொண்டாவை பார்த்தபடியே ஆடினார் ராஷ்மிகா. இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.