ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

இயக்குனர் பாண்டிராஜ் கடைசியாக சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' படத்தை இயக்கினார். வியாபார ரீதியாக சரியாக போகாத, அந்தப் படம் வெளிவந்து இரண்டு வருடங்களாகிவிட்டது. அதற்கடுத்து விஷால் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதற்கான வேலைகள் மேற்கொண்டு நடக்கவில்லை.
இதனிடையே, நடிகர் ஜெயம் ரவியிடம் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ். அந்தக் கதை ரவிக்குப் பிடித்துவிடவே அதை தனது மாமியாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமாரிடம் தெரிவித்திருக்கிறார். 'சைரன்' பட நஷ்டத்திற்காக அவர்களுக்கு மீண்டும் ஒரு படத்தில் நடித்துத் தருவதாக சொல்லியிருந்தாராம் ரவி. அவர்களும் இந்த புதிய கூட்டணிக்கு சம்மதம் சொல்லியிருக்கிறார்கள்.
ஜெயம் ரவி தற்போது 'ஜீனி, காதலிக்க நேரமில்லை, பிரதர்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அவரது அண்ணன் இயக்கத்தில் 'தனி ஒருவன் 2' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளது. எனவே, பாண்டிராஜ் படத்தை உடனடியாக ஆரம்பிக்க உள்ளார்களாம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.




