தொடர்கிறது…. மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் கூட்டணி | 'காந்தாரா' தயாரிப்பாளர், ரிஷப் ஷெட்டி இடையே மோதல்? | இசையமைப்பாளரான இயக்குனர் : நடிகரான பிரபுதேவா மகன் | துணிச்சலான காவல்துறை அதிகாரி வேடத்தில் சம்யுக்தா! | ஓடிடியில் வெளியானது அர்ஜுனின் சீதா பயணம்! | யோகி பாபுவின் 'அர்ஜுனன் பேர் பத்து' படத்தின் டீசரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்! | 'துரந்தர் தி ரிவெஞ்ச்' மற்ற மொழி தணிக்கை தாமதம் | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..! | பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்” | கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்? |

கடந்த 2022ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் சிரஞ்சீவி வைத்து ரீமேக் செய்தார் மோகன் ராஜா. அப்படத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, சல்மான் கான் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் சிரஞ்சீவி நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போகிறார் மோகன்ராஜா. பி.வி.எஸ். ரவி என்பவர் இந்த படத்திற்கு கதை எழுதும் நிலையில் தற்போது ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. மேலும், அடுத்தபடியாக தனி ஒருவன்- 2 படத்தை மோகன் ராஜா இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சிரஞ்சீவி படத்தை இயக்கப் போவதால் அதை முடித்துவிட்டு அப்படத்தை அவர் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. அதோடு, விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களுக்கு பிறகு அஜித் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்கப் போகிறார் மோகன் ராஜா.




