சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

சமீபகாலமாக தான் இசையமைத்த படங்களின் பாடல்களை யாரேனும் பயன்படுத்தினால் உடனே இளையராஜா தரப்பு அதற்கு நோட்டீஸ் அனுப்பி இழப்பீடு வாங்குவதில் தீவிரமடைந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் டைட்டில் டீசரில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தப்பட்டதற்காக நோட்டீஸ் பாய்ந்த நிலையில் , தற்போது மலையாளத்தில் உருவான மஞ்சும்மேல் பாய்ஸ் என்ற படத்திலும் குணா படத்தில் இடம்பெற்ற பாடல் இடம் பெற்றதற்காக பதிப்புரிமை சட்டப்படி இளையராஜாவின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அந்த பாடலை பயன்படுத்தியதற்காக இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளார். மேலும் மலையாளத்தில் உருவான இந்த படம் தமிழ் ரசிகர்களிடமும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றதோடு, உலக அளவில் இதுவரை 200 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.