தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 1, 2, 3 ஆகிய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை சுந்தர். சி இயக்கி, நடித்திருந்தார். இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இந்தாண்டில் இதுவரை 90 படங்கள் வரை வெளியாகி உள்ளது. அவற்றில் இந்தபடம் தான் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை தந்தது. இப்படம் வெளியாகி மூன்று வாரங்களைக் கடந்த நிலையில் இப்போது உலகளவில் ரூ. 100 கோடி வசூலை எட்டியதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் மூலம் சுந்தர்.சிக்கு முதல் ரூ.100 கோடி வசூலித்த படமாக அரண்மனை 4 அமைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் மட்டும் அரண்மனை 4ம் பாகம் ரூ.60 கோடி வசூலைக் கடந்ததாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




