லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் அஜித் குமார். இதில் குட் பேட் அக்லி படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தில் முழு வீச்சில் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார் அஜித். ஜூன் மாதம் இறுதியில் இருந்து விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவும் திட்டப்பட்டுள்ளார்.
அந்த வகையில், இந்த ஆண்டில் இரண்டு படங்களிலும் நடித்து முடித்து விடும் அஜித், அடுத்தபடியாக சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்கியிருக்கும் அவர் ஏற்கனவே அஜித் இடத்தில் கதை சொல்லி ஓகே பண்ணி வைத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் மோகன் ராஜாவும் அஜித்தை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார். அந்த கதையும் அஜித்துக்கு பிடித்து விட்டதால், கைவசம் உள்ள இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அடுத்தபடியாக சிவா, மோகன் ராஜா ஆகிய இருவரின் படங்களிலும் நடிப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.