பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்திக் | ரூ.3 லட்சத்திற்கு ஏலம்போன மம்முட்டி எடுத்த புகைப்படம் | சத்ருகன் சின்ஹா மருத்துவமனையில் அனுமதி | தொடர்ந்து அவதூறு பரப்புகிறார் : சுசித்ரா மீது கார்த்திக் குமார் நீதிமன்றத்தில் புகார் | அப்புகுட்டி படத்தில் கள்ளச்சாராய சாவு | மீண்டும் நாயகியாக இனியா | டிராபிக் கான்ஸ்டபிளாக நடிக்கும் பிரபுதேவா | ஷங்கர் கைவசம் 3 பிரம்மாண்ட கதைகள் : என்ன மாதிரி தெரியுமா... | தெலுங்கு சினிமாவின் 5வது 600 கோடி படமாக 'கல்கி 2898 ஏடி' | அட்லியின் புதிய படத்தில் ரஜினியா..., கமலா...? |
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கல்கி 2898 ஏடி. நாக் அஸ்வின் இயக்கி உள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வருகிற ஜூன் 27ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில், இந்த படத்தில் பிரபாஸின் நண்பனாக புஜ்ஜி என்ற ஒரு ரோபோ நடித்திருக்கிறது. அந்த ரோபோவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் டப்பிங் கொடுத்திருக்கிறார் என்று அறிவித்துள்ளார்கள். அதோடு இந்த புஜ்ஜி என்ற ரோபோவை வருகிற 22ம் தேதி அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.