ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஜூனியர் என்டிஆர் தற்போது தெலுங்கில் தேவரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். சிவா கொரட்டாலா இயக்கியுள்ள இந்த படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் ஹிந்தியில் உருவாகி வரும் வார் 2 என்ற படத்திலும் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர்.
இந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்றத்தில் வந்த ஒரு நில சர்ச்சை வழக்கு தொடர்பாக ஜூனியர் என்டிஆரின் பெயரும் சோசியல் மீடியாவில் பரபரப்பாக அடிபட்டது. அதாவது கடந்த 2003ல் ஜூனியர் என்டிஆர் ஜூப்ளி கில்ஸ் பகுதியில் 36 லட்சம் மதிப்புள்ள ஒரு இடத்தை வாங்கி இருந்தார். அதன் பிறகு 2013ல் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்று விட்டார்.
தற்போது அந்த இடத்தை வைத்திருப்பவருக்கு கடன் மீட்பு தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதற்கான விசாரணை சமீபத்தில் நடைபெற்றபோது, இந்த இடம் ஜூனியர் என்டிஆருக்கு சொந்தமானது என்பது போன்று செய்தி வெளியானது. இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் இந்த இடத்தை பத்து வருடங்களுக்கு முன்பே விற்று விட்டதாகவும் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஜூனியர் என்டிஆர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.