இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீண்ட காலமாகவே ரசிகர்கள் எதிர்பார்த்ததை நிறைவேற்றும் விதமாக மகேஷ்பாபுவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி. இந்த படம் காட்டை மையப்படுத்தி ஒரு பிக்ஷன் கதையாக உருவாகி இருக்கிறதாம். இந்த படத்தில் தனது கதாபாத்திரத்திற்கான உடல் அமைப்பு, தோற்றம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக சமீபத்தில் வெளிநாடு சென்று வந்தார் மகேஷ்பாபு. இந்த நிலையில் இந்த படத்தின் மகேஷ்பாபுவுக்கு இணையாகவே இன்னொரு கதாபாத்திரமும் இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு புதிய செய்தி வெளியானது.
அதாவது இந்த படத்தை தயாரிக்கும் துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் காஸ்டிங் டைரக்டராக விரியன் சாமி என்பவரை நியமித்திருப்பதாகவும் அவர் மகேஷ்பாபு கதாபாத்திற்கு இணையாக பயணிக்கும் இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரை தேடி வருகிறார் என்றும் ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வெளியானது.
இந்த நிலையில் இந்த செய்தியை மறுத்துள்ள துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் நாங்கள் விரியன் சாமி என்பவரை காஸ்டிங் டைரக்டராக நியமிக்கவில்லை. தற்போது வெளியாகியுள்ள செய்திகள் எதுவுமே உண்மை இல்லை. தங்களது நிறுவனம் வாயிலாக வெளியாகும் செய்திகள் மட்டுமே உண்மை என்று ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த திடீர் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.