நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித்குமார் அதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி என்ற படத்திலும் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் அஜித்தின் இன்ட்ரோ பாடல் கட்சியும், ஒரு ஆக்ஷன் காட்சியும் படமாக்கப்பட்டு வருகிறதாம்.
இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய இரண்டே நாட்களில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவியது. ஆனால் அந்த செய்தியை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மறுத்துள்ளார். குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜூன் 7-ம் தேதி வரை அங்கு நடைபெற உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தி முழுக்க முழுக்க தவறானது என்று தெரிவித்திருக்கிறார் . அதோடு ஆந்திராவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் நடைபெற்ற அன்றைய தினம் மட்டுமே குட் பேட் அக்லி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அதற்கு அடுத்த நாளிலிருந்து மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம்.