காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் 'டபுள் ஐஸ்மார்ட்'. ராம் பொதினேனி, ஹாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்பட பலர் நடிக்கிறார்கள். மணிசர்மா இசையமைக்கிறார். சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
பல வருடங்களுக்கு முன்பு பூரி ஜெகநாத் இயக்கிய 'ஐ-ஸ்மார்ட்' படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகிறது. தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்பையில் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற 15ம் தேதி ராம் பொதினேணியின் பிறந்தநாளை ஒட்டி படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது.
தெலுங்கில் தயாராகும் இந்த படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




