ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா | மலையாளத்தில் அறிமுகமாகும் பிரீத்தி முகுந்தன் | ‛மதராஸி' படம் செப்.5ம் தேதி திரைக்கு வருகிறது | குட் பேட் அக்லி : ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் |
தமிழில் அழகிய தீயே படத்திண் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை நவ்யா நாயர். அதன் பிறகு சேரனின் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடந்த 2010ல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
சமீபத்தில் சென்னைக்கு வந்த அவர், அங்கு தனது மனம் கவர்ந்த விஷயங்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டதாவது: நெய் வறுவல் வாசனையிலிருந்து பில்டர் காபியின் ஆறுதல் சிப் வரை சென்னையின் ஒவ்வொரு மூலையும் ஒரு கதை சொல்கிறது. மல்லிகை வாசனை வீசுகிறது, காஞ்சிபுரம் புடவைகள் கண்களை கவருகிறது; பாரம்பரியத்தின் மீதான காதல் ஆழமாக ஓடும் நகரம் இது.
கோயில்கள், வரலாற்றின் காவலர்களாக நிற்கின்றன; கடந்த கால கதைகளை கிசுகிசுக்கும் பொக்கிஷங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பரதநாட்டியத்தின் அழகான அசைவுகள், பிரியா அக்கா போன்ற அன்பான குருக்களின் ஞானத்தாலும் அக்கறையாலும் வழிநடத்தப்படும் ஆன்மாவின் சாரத்தைப் பேசுகின்றன. துடிப்பான நிறங்கள் மற்றும் செழுமையான கலாசாரம் கொண்ட சென்னை, இதயங்களைக் கவரும் மற்றும் அவற்றை இறுக்கமாகப் பிடிக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.