தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

இயக்குனர் சுந்தர்.சி கடந்த 30 வருடங்களில் தொடர்ந்து ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் விதமாக படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்துள்ளார். அது மட்டுமல்ல ரஜினி, கமல், அஜித் போன்ற முன்னணி நடிகர்களையும் வைத்து படம் இயக்கியுள்ளார். குறிப்பாக விஜய்க்காக தான் உருவாக்கிய கதையில் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக அந்த சமயத்தில் தன்னுடைய இயக்கத்தில் நடிக்க விரும்பிய அஜித்தை வைத்து அவர் இயக்கிய படம் தான் 'உன்னைத் தேடி'. அந்த படத்தில் தான் நடிகை மாளவிகாவும் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் அஜித் அடிக்கடி கார் மற்றும் பைக் ரேஸ்களில் ஈடுபடுவதும் அதனால் சில நேரங்களில் விபத்துகளை சந்திப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். உன்னைத் தேடி படத்தில் நடிக்கும் போது அவர் கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். முதுகு தண்டுவடத்தில் அவருக்கு அதிக பாதிப்பு இருந்தது. ஒருமுறை அந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள சாலக்குடியில் உள்ள அருவி பகுதியில் நடைபெற்ற போது படக்குழுவினர் அனைவரும் ஜில்லிடும் தண்ணீரில் இறங்கி நடக்க வேண்டி இருந்தது.
அப்போது அனைவரும் அந்த தண்ணீரின் குளுமையால் கிடுகிடு என நடுங்க, அஜித் மட்டும் எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் இயல்பாக இருந்தாராம்.. அப்போது சுந்தர்.சி அவரிடம் எப்படி உங்களால் இந்த குளிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடிகிறது என்று கேட்டபோது அஜித் சொன்ன தகவல் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது.
அதாவது அஜித் தனது முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பால் தன் கால்களில் ஏற்படும் பாதிப்பை மூளையில் உணரும் விதமான உணர்வையே இழந்திருந்தார். அதனால் தன் கால்களில் தண்ணீர் பட்ட அந்த ஜில் தன்மையை அவரது மூளையால் உணர முடியாமல் போய்விட்டது. அதுமட்டுமல்ல வழக்கமாக நடக்கும்போது அனிச்சை செயலாக ஒவ்வொரு அடியையும் எல்லோரும் எடுத்து வைப்பார்கள். ஆனால் அஜித் மட்டும் தனது ஒவ்வொரு அடியையும் கீழே குனிந்து தனது கால்களை பார்த்தபடி தானாகவே எடுத்து வைப்பார் என்பதும் அவர் மூலமாக தெரிய வந்தது என்கிற ஒரு புது தகவலை கூறியுள்ளார் சுந்தர் சி. அதன் பிறகு அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு அஜித் வழக்கமான இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் என்பதும் குறிப்பிடப்படத்தக்கது.