அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
சின்னத்திரை நடிகை பிரியங்கா நல்காரி தனது காதலர் ராகுலை அவசர அவசரமாக திருமணம் முடித்தார். திருமணம் முடித்த கையோடு கணவருக்காக நடிப்பதை இனி கைவிடுவதாக சீரியலை விட்டு வெளியேறினார். ஆனால், சில நாட்களிலேயே கணவருடன் எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்தார். அதன்பிறகு திடீரென நளதமயந்தி என்கிற புதிய தொடரில் மீண்டும் ஹீரோயினாக கமிட்டானார். அப்போது ஒரு முறை ரசிகர்ககளின் கேள்விக்கு பதிலளித்த ப்ரியங்கா நான் சிங்கிளாக இருப்பதாக தெரிவித்தார். இதன்மூலம் ராகுலை விட்டு ப்ரியங்கா பிரிந்துவிட்டதாக அனைவரும் நினைத்தனர். இந்நிலையில், ப்ரியங்கா தனது பிறந்தநாளை கணவர் ராகுலுடன் சேர்ந்து கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவர் குறித்து உருக்கமான ஹாஸ்டேக்குகளையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் ராகுலுடன் ப்ரியங்கா இணைந்துவிட்டாரா? என அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர். மேலும், இந்த பிறந்தநாளுக்கு பிறகாவது இருவரும் சண்டையில்லாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் அட்வைஸ் செய்து வாழ்த்தி வருகின்றனர்.